உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  இது கூடவா சொல்ல தெரியாது!

 இது கூடவா சொல்ல தெரியாது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ., கீர்த்தனாவுக்கு, தொழில் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிரசாரத்தின் போதே, 'பட்டாசு ஆலை விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுப்பேன்' என கூறியிருந்தார். அமைச்சரானதும், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், வியாபாரிகளுடன் சிவகாசியில் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார். பட்டாசு உற்பத்தியாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்த நிலையில், கீர்த்தனா எதுவும் பேசாமல் கூட்டத்தை முடித்தார். உற்பத்தியாளர்கள் சிலர், அமைச்சரை பேசுமாறு கூறினர். அதற்கு அவர், 'உங்களிடம் மிக விரிவாக பேச வேண்டும் என்றுதான் ஆசை. விட்டிருந்தால் ஒரு மணி நேரம் கூட பேசியிருப்பேன். ஒரு சில காரணங்களால், பின்பு பேசுவோம்' என்றபடியே புறப்பட்டார். பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர், 'அட, ஒரு மணி நேரம் எல்லாம் பேச வேண்டாம்... உங்க கோரிக்கைகளை பரிசீலனை பண்றேன்னு கூடவா சொல்ல தெரியாது...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tamilan
மே 25, 2026 22:27

காக்ரோச்சுகள், புற்றீசல்கள் போல் வோட்டு கிடைத்து, த வெ க வினருக்கு பலம் நழுவி பாலில் விழுந்துள்ளது . என்னசெய்வதென்று தெரியாமல் தடுமாறிக்கொண்டு, திகைத்துக்கொண்டு, பரிதவித்துக்கொண்டு, வீர வசனம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்


D.Ambujavalli
மே 25, 2026 08:46

எதையாவது உளறி வைத்து அது ஆள்பவருக்கு ஏதிராக- போய்விடுமோ என்ற தயக்கம்தான் ஊடகங்கள்தான் எங்கே எதை பிடிக்கலாம், அதை எப்படி ஊதி பெருக்கலாம் என்று காத்திருக்கின்றனவே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை