வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த selfie யால் அந்த அதிமுக எம்.எல்.ஏ யின் பதவிக்கு ஏதாவது பிரசினை வரலாம் பழனிசாமிக்குப் பிடிக்காதவர் என்னும்போது அவருடன் உறவாடலாமா?
துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, கோவை கொடிசியா வளாகத்தில், தொழில் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடந்தது. இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்றனர். தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை வந்தபோது, அனைவரிடமும் நலம் விசாரித்தார். அப்போது, கோவை வடக்கு அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அம்மன் அர்ச்சுனன், அண்ணாமலையிடம் சென்று, 'உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும்' என்றார். அதற்கு அண்ணாமலை சங்கோஜமாக, 'ஏனுங்ணா நீங்க...' என்றார். ஆனாலும், விடாப்பிடியாக அண்ணாமலையை நிறுத்தி, 'வரலாறு முக்கியமுங்க' என்றபடியே செல்பி எடுத்துக் கொண்டார் அம்மன் அர்ச்சுனன். இதை பார்த்த மூத்த நிருபர் ஒருவர், 'அண்ணா மலைன்னாலே அலர்ஜின்னு சொல்லி, அவரை பதவியில இருந்து துாக்க வச்சுட்டு, இப்ப ஓடி வந்து செல்பி எடுக்கிறாங்களே... அ.தி.மு.க.,வினரின் அரசியல் கணக்கே புரியலையே...' என, முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே நடந்தனர்.
இந்த selfie யால் அந்த அதிமுக எம்.எல்.ஏ யின் பதவிக்கு ஏதாவது பிரசினை வரலாம் பழனிசாமிக்குப் பிடிக்காதவர் என்னும்போது அவருடன் உறவாடலாமா?