உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ரோல் மாடலா எடுத்துக்கணும்!

ரோல் மாடலா எடுத்துக்கணும்!

மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்தது. புற்று நோயில் இருந்து மீண்ட புதுக்கோட்டையைச் சேர்ந்த பசுபதி என்ற பெண் உள்ளிட்ட எட்டு பேர், தங்களது அனுபவங்களை சொல்வதற்காக வந்திருந்தனர். கலெக்டர் பிரவீன்குமார் வந்த போது, பசுபதியும் வணக்கம் வைத்தார். மேடையேறும் போது அவரையும் அழைத்த கலெக்டர், தன் இருக்கைக்கு அருகே அமர வைத்தார்; டாக்டர்களும் பசுபதிக்கு சால்வை அணிவித்து, கவுரவித்தனர். ஆனந்த கண்ணீருடன் அப்பெண் பேசுகையில், 'என் பெண் குழந்தைகளுக்காக, என் உயிரை மீட்டு தந்த டாக்டர்களை தெய்வங்களாக பார்க்கிறேன். இப்படியொரு கலெக்டரை சினிமாவில் கூட பார்த்ததில்லை. நோயாளியை ஊக்கப்படுத்தும் பண்பாடு, மனிதாபிமானமுள்ள கலெக்டரை என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை...' என, உணர்ச்சி வசப்பட்டார். இதை கேட்ட மருத்துவ மாணவி ஒருவர், 'இந்த கலெக்டரை நாமெல்லாம் ரோல் மாடலா எடுத்துக்கணும்...' என கூற, சக மாணவியர் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ