உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / உதயநிதியை விட பெரிய ஆளா?

உதயநிதியை விட பெரிய ஆளா?

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவின்மகனும், பெரம்பலுார் தி.மு.க., - எம்.பி.,யுமான அருண் நேருவுக்கு, டிச., 12ல் பிறந்த நாள் வருகிறது. இதற்காக, மாவட்டம் முழுதும் நேருவின் ஆதரவாளர்கள்டிஜிட்டல் பேனர்கள் வைத்துள்ளனர்.திருச்சி மாநகரின் முக்கிய ரவுண்டானாக்களிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், அருண் நேருவுக்குவாழ்த்து தெரிவித்து, 20, 30 அடி உயரம் வரை கூட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.'ஈசன் பெற்ற ஆசை மகனே, தாயுமானவரின் தங்க மகனே, நாடாளும் மன்றமே, மன்னவரே, சின்னவரே'என்றெல்லாம் அடைமொழி கொடுத்து, மாநகரில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை தி.மு.க.,வினரே வியப்புடன் பார்க்கின்றனர்.தி.மு.க., இளைஞர்கள் சிலர், 'உதயநிதி பிறந்த நாளுக்கு கூட இவ்வளவு பேனர்கள் வைக்கலையே... அவரை விட, அருண் நேரு பெரிய ஆளாகிட்டாரா...?' என, முணுமுணுத்தபடியே கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

SRIKANTH SUBRAMANIAN
டிச 05, 2024 08:44

குடும்ப கொத்தடிமைகள்.. மாவட்ட அளவில இருந்தா என்ன மாநில அளவில இருந்தா என்ன??


Anantharaman Srinivasan
டிச 04, 2024 21:22

கோர்ட் தீர்ப்க்கெல்லாம் முரசொலி கடிதங்களுக்கு இருக்கும் மதிப்பு கூடயில்லையே. நீதிமன்றங்கள் என்ன செய்ய போகின்றன.??


D.Ambujavalli
டிச 04, 2024 07:02

கட்சியின் பெருந்தலைகளின் வாரிசுகள் அனைவருக்காகவும் பேனர் வைக்க ஆரம்பித்தால் 365 நாளும், மூலை மூளைமுடுக்குகளும் போதாது வருஷத்துக்கு 10/15 சாவுகளாவது நிகழ்ந்தால்தான் தங்கள் பேனருக்கு மரியாதை என்பது அவர்களின் எண்ணம் போலும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை