| ADDED : மே 18, 2025 11:49 PM
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, அம்பத்துாரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும், பொதுக் கூட்டமும் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர்கள் ஜீவா, பாண்டியராஜன், தம்பி ராமையா உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.நிகழ்ச்சி முடியும் நேரத்திற்கு வந்த நடிகர் ஜீவா, 'நம் முதல்வர் ஸ்டாலின், 37 வயது நபரை போல் இருக்கிறார்' என்றார். பின், தான் நடித்த, சிவா மனசுல சக்தி படம் பார்த்துவிட்டு, முதல்வர் பாராட்டியதை பகிர்ந்த ஜீவா, மூன்று நிமிடங்களுக்குள் சுருக்கமாக பேச்சை முடித்துவிட்டு, அவசர அவசரமாக கிளம்பினார்.பார்வையாளர் ஒருவர், 'முதல்வரை நன்றாக புகழ்ந்து பேசினால், தேர்தல் பிரசாரத்துக்கு அழைத்து விடுவரோ என பயந்து, மேலோட்டமாக பேசிட்டு ஓட்டம் பிடிக்கிறாரோ...?' என, 'கமென்ட்' அடிக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து சிரித்தனர்.