வாசகர்கள் கருத்துகள் ( 1 )
‘அழுதவளுக்க அகமுடையான் வந்தால் சிரித்தவளுக்கும் சேர வருவான்’ யார் வெயிலில் அலைந்தாலும், நின்ற நிலையில் இருந்தாலும் பிரசாரம் தானே என்ற ஞானம் உள்ளவர்
மேலும் செய்திகள்
எலக் ஷன் வந்தது... 'ஈகோ' பறந்தது!
17-Mar-2026
திண்டுக்கல்லில், அ.தி.மு.க., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா சமீபத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற, திண்டுக்கல் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், 'வேட்பு மனு தாக்கலை ரகசியமா செய்ய முடியாது; நாள், கிழமையெல்லாம் பார்த்து தான் செய்யணும். நான், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு ஜோசியரை பிடித்துள்ளேன். 'அதனால, நல்ல நாள் பார்த்து சொல்றேன், எல்லாரும் வந்துருங்க. தேர்தல் பிரச்சாரம் எல்லாம் பெரிதாக இல்ல. இப்ப உங்களை பார்த்து பேசுவதே பிரச்சாரம் தான். நீங்க எல்லாம் கூட இருந்து, 'சப்போர்ட்' பண்ணுங்கப்பா...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'எல்லாரும் வேகாத வெயில்ல தெரு தெருவா சுத்திட்டு இருக்காங்க... இவர், சிவன் - பார்வதியை சுத்தி வந்து, ஞானப்பழத்தை வாங்கிய பிள்ளையார் மாதிரி, 'ஈசி'யா ஜெயிக்க பார்க்கிறாரோ...?' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
‘அழுதவளுக்க அகமுடையான் வந்தால் சிரித்தவளுக்கும் சேர வருவான்’ யார் வெயிலில் அலைந்தாலும், நின்ற நிலையில் இருந்தாலும் பிரசாரம் தானே என்ற ஞானம் உள்ளவர்
17-Mar-2026