உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அரசு விழாவா; கட்சி நிகழ்ச்சியா?

 அரசு விழாவா; கட்சி நிகழ்ச்சியா?

சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில், அறநிலையத்துறை சார்பில், 85 மூத்த தம்பதியினரை கவுரவிக்கும் விழா, சமீபத்தில் நடந்தது. மானாமதுரை தொகுதி, தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழரசி, கோவில் செயல் அலுவலர் ஜென்னி உள்ளிட்டோர் பங்கேற்றனர். எம்.எல்.ஏ., ஆதரவாளரான, தி.மு.க., ஒன்றிய செயலர் கடம்பசாமி, கட்சியினருடன் மேடையில் அமர்ந்திருந்தார். விழாவில், தமிழரசி பேசி கொண்டிருந்த போது, மாவட்ட தி.மு.க., துணை செயலர் சேங்கைமாறன் வரவே, அவரும், அவரது ஆதரவாளர்கள் இருவரும், மேடையில் காலியாக இருந்த இரண்டு இருக்கைகளில் அமர்ந்து விட்டனர். செயல் அலுவலர் ஜென்னி, இருக்கை இல்லாமல் நின்று கொண்டிருந்தார். அடுத்து, தாசில்தார் ஆனந்தபூபாலன் வர, அவருக்கும் இருக்கை இல்லை. தி.மு.க., நிர்வாகிகள் யாரும் எழுந்து அவருக்கு இடம் தரவில்லை. இதை பார்த்த பக்தர் ஒருவர், 'இது, அரசு விழாவா, ஆளுங்கட்சி நிகழ்ச்சியான்னு தெரியலையே... இருக்கையை விட்டு எழுந்திருக்காமல் இருக்காங்களே' என முணுமுணுத்தபடியே, அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
மார் 17, 2026 15:04

விடியல் திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு எந்தளவுக்கு மரியாதை தரப்படுகிறது என்பதற்கு அரசுவிழா மேடை ஒரு சாட்சி..


D.Ambujavalli
மார் 16, 2026 06:51

நாங்கள் இருக்கும் இடத்தில் அரசு அதிகாரிகளுக்கு இவ்வளவுதான் மரியாதை என்று இவர்கள் இருந்தால் சமயம் பார்த்து அவர்கள் கைவரிசையைக் காட்டி எத்தை இதில் மாட்டிவைக்கலாம் என்றுதான் யோசிப்பார்கள் அவர்கள் பகை ஆணி வேரையே அசைக்கவல்லது


புதிய வீடியோ