உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கட்சிக்கு சந்திராஷ்டமம் தான்!

கட்சிக்கு சந்திராஷ்டமம் தான்!

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாதுரை பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மாவட்ட செயலரும், பொள்ளாச்சிதொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஜெயராமன் பங்கேற்றார்.அப்போது பேசுகையில், 'அ.தி.மு.க., எப்பவும் சொக்கத் தங்கம்; அது காய்ச்சி காய்ச்சி ஊற்றும் போது தான் சுத்தமாகும். அதேபோல் நமக்கு அழிவே இல்லை. எம்.ஜி.ஆர்., கட்சி துவக்கி, கொடி அறிமுகம் செய்த நேரம் சுக்கிர திசை. நமக்கு எப்போதும் வீழ்ச்சியில்லை. ஒரு அடி சரிந்தால், 100 அடி உயர்வு கிடைக்கும். ஏழை மக்களுக்காக அ.தி.மு.க., மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமரும் நாள், வெகு தொலைவில் இல்லை' என்றார்.கட்சி நிர்வாகி ஒருவர், 'இப்படி ஏதாச்சும் பேசி, தொண்டர்கள் மனசை தேத்தி விடுங்க... இல்லைன்னா கட்சிக்கு சந்திராஷ்டமம் தான்...' என முணுமுணுக்க, அருகில் இருந்த சக நிர்வாகிகள், அவரை முறைத்து பார்த்தபடி நடந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 02, 2024 18:49

எம். ஜி. ஆரின் அரவணைப்பு, அம்மாவின் கண்டிப்பு எதுவும் இல்லாமல் வாசலில் எதிர்ப்பு, புழக்கடையில், கேஸ்கள் கிளப்பாமல் இருக்க உறவாடல் , என்று ஒவ்வொரு தேர்தலிலும் தோல்வியைக் கண்டுகொண்டிருக்கும் நிலையில் தொண்டர்களுக்கு இவர் வாக்கு எப்படி நம்பிக்கை அளிக்கும் ?


Nallavan
அக் 02, 2024 07:40

அஸ்தமனம் எப்போது ?" இருபத்தாருளதான் "


முக்கிய வீடியோ