வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பசங்களுக்கு மொபைல் போன் வாங்கித்தருவது பெரும்பாலும் பெற்றோர்கள் தானே..?
சென்னை பெரம்பூரில், கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, மேயர் பிரியா தலைமையில், தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகை தேவயானி பேசுகையில், 'மாணவர்கள் படிப்பதற்கு, அரசு எவ்வளவோ நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்கள் கவனச் சிதறல்களை ஒதுக்கிவிட்டு, படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். 'பள்ளி பருவம் பெரிதாக தெரியலாம்; ஆனால், மிகக் குறுகியது. படிப்பை முடித்த பிறகு, இன்னும் நன்றாக படித்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றும். அப்போது வருத்தப்பட்டு பயனில்லை. எனவே, சரியான வயதில் கல்வியை நிறைவு செய்யுங்கள். இந்த தலைமுறை நன்றாக படித்தால் தான், அடுத்த தலைமுறையை சிறப்பாக வழி நடத்த முடியும்' என்றார். இதை கேட்ட மாணவரின் தந்தை ஒருவர், 'நம்ம பசங்க மொபைல் போனும் கையுமா தானே இருக்கா னுங்க... இவங்க அறிவுரையை கேட்டு நடந்தா நல்லது' என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.
பசங்களுக்கு மொபைல் போன் வாங்கித்தருவது பெரும்பாலும் பெற்றோர்கள் தானே..?