உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நொந்து போயிட்டாரு போல!

நொந்து போயிட்டாரு போல!

பாகிஸ்தானுடன் இந்திய ராணுவ வீரர்கள் போரிட்டது குறித்து, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேட்டியளித்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை சென்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் விளக்கம் அளிக்கும் அளவிற்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.இந்நிலையில், பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, அ.தி.மு.க., சார்பில், மதுரையில் மெகா ரத்த தான முகாம் நடந்தது. இதில் பங்கேற்ற செல்லுார் ராஜுவிடம், நிருபர்கள் சில கேள்விகளை கேட்க, 'நிகழ்ச்சியை பற்றி மட்டும் கேளுங்க; மற்றதை பற்றி பேசுனா, நீங்க என்ன செய்தி போடுவீங்கனு எனக்கு தெரியும். எனவே, நன்றி வணக்கம்' என, பெரிய கும்பிடு போட்டு, 'ஆளை விட்டால் போதும்' என்பது போல கிளம்பினார்.மூத்த நிருபர் ஒருவர், 'காமெடியா பேசிட்டு இருந்தவரை பத்தி வில்லன் போல செய்திகள் வந்ததால், ரொம்பவே நொந்து போயிட்டாரு போல...' என கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 11, 2025 18:47

வார்த்தையை விடும் முன் நூறு முறை யோசிக்க வேண்டும். அதுவும் மீடியாக்களிடம் தம் ‘மேதாவித்தனத்தை’ காட்டினால் இப்படித்தான் வாயைத் திறக்கவே அஞ்சும் நிலை ஏற்படும்