| ADDED : ஜூன் 14, 2025 10:25 PM
தேனி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்டச் செயலர் தங்க தமிழ்செல்வன், தென்மண்டல தி.மு.க., பொறுப்பாளரான அமைச்சர் தங்கம் தென்னரசு, மூத்த அமைச்சர் பெரியசாமி மூவரும் பேசினர்.மூவர் பேச்சிலும், 'கட்சியினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நமக்குள் பிரச்னைகள் இருந்தாலும், சட்டசபை தேர்தல் வெற்றியை இலக்காக வைத்து உழைக்க வேண்டும்' என்பதை, மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர்.கூட்டம் முடிந்ததும், மூத்த நிர்வாகி ஒருவர், 'நம்ம மாவட்டத்துல தங்க தமிழ்செல்வன், கம்பம் ராமகிருஷ்ணன், மூக்கையான்னு ஆளுக்கொரு கோஷ்டியா செயல்படுறாங்க... அதான், ஒற்றுமையா இருங்க, இருங்கன்னு அழுத்தி சொல்றாங்க...' எனக் கூற, சக நிர்வாகியோ, 'சூரியன் மேற்கே உதிச்சாலும் உதிக்கும்... இவங்க ஒற்றுமையா இருப்பது மட்டும் நடக்கவே நடக்காதுண்ணே...' என்றபடியே நடையை கட்டினார்.