உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ‘ஜென் ஸி பின்னாடி போவோம்!’

‘ஜென் ஸி பின்னாடி போவோம்!’

பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி, ஓய்வூதியதாரர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பு குழு சார்பில், மண்டல அளவிலான தர்ணா போராட்டம், சமீபத்தில் மதுரையில் நடந்தது. குழுவின் திருநெல்வேலி மாவட்ட அமைப்பாளர் நடராஜா பேசுகையில், ‘காக்ரோச் ஜனதா கட்சி என்ற பெயரில், எந்த அரசியல் பின்புலமும் இல்லாத நம் பேரப் பிள்ளைகள், ‘நீட்’ தேர்வு முறைகேடுக்கு எதிராக, டில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராடி வெற்றி கண்டனர். ‘அவர்களால் முடிந்தது நம்மால் முடியாதா? அவர்கள் வழியில் நாமும் நவ., 25ல், டில்லி ஜந்தர் மந்தரில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்’ என்றார். இதை கேட்ட ஓய்வூதியர் ஒருவர், ‘தாத்தா வழியில் பேரப் பிள்ளைகள் செல்வது தான் வழக்கம்... இப்ப, ‘ஜென் ஸி’ எனப்படும் இளைய தலைமுறையினர் காலம் என்பதால், அவங்க வழியில் நாம போனால் தான் காரியமாகும்’ என கூற, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை