வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சம்பந்தப்பட்ட எம். எல். ஏ யம் எம். பியும் அந்தத் தொழிற்சாலைக்கு. ‘நன்றி ‘ பாராட்டுமளவு கவனிப்பு இருந்திருக்கும் இவருக்கு இல்லாததால் தைரியமாகப் பேட்டி அளிக்கிறார்
சென்னை, திருவொற்றியூரில் விஷவாயு கசிவால், தனியார் பள்ளியில் படித்த, 45 மாணவியர், வாந்தி, மயக்கம், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், வடசென்னை எம்.பி., கலாநிதி, மாதவரம் எம்.எல்.ஏ., சுதர்சனம் ஆகியோர், பாதிப்பு குறித்து மாணவியரிடம் கேட்டறிந்தனர். அப்போது, அங்கிருந்த நிருபர்களுக்கு சுதர்சனம் பேட்டியளித்தார்.இளம் நிருபர் ஒருவர், 'இதென்ன கட்சி நிகழ்ச்சியா...இவர் மாவட்ட செயலராக இருந்தாலும், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர். இவர் அமைச்சராக இருந்தாலாவதுபேட்டி அளிக்கலாம்; சம்பந்தப்பட்ட எம்.பி., -- எம்.எல்.ஏ., பேட்டி தருவது தானே சரி...' என, முணுமுணுத்தார்.குசும்புக்கார மற்றொரு நிருபர், 'அட அவருக்கு தான் அமைச்சர் யோகம் இல்லையே... விடுங்க, பேட்டியாவது கொடுத்துட்டு போகட்டும்...'என்றபடியே, நடையை கட்டினார்.
சம்பந்தப்பட்ட எம். எல். ஏ யம் எம். பியும் அந்தத் தொழிற்சாலைக்கு. ‘நன்றி ‘ பாராட்டுமளவு கவனிப்பு இருந்திருக்கும் இவருக்கு இல்லாததால் தைரியமாகப் பேட்டி அளிக்கிறார்