வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த அவஸ்தையை கபாலி கோயிலில் சென்ற முறை கண்டு நானும் புலம்பினேன்.
சென்னை திருவொற்றியூரில், பட்டினத்தார் குரு பூஜை விழா கோலாகலமாக நடந்தது. இதில், உற்சவர் பட்டினத்தார் சிறப்பு மலர் அலங்காரத்தில், கரும்பால் ஜோடிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளி, மாடவீதிகளில் உலா வந்தார்; திரளான பக்தர்கள் பங்கேற்று, தரிசனம் செய்தனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் சுவாமியை வணங்கு வதற்கு பதிலாக, தங்கள் மொபைல் போனில் படம் மற்றும் வீடியோ எடுப்பதிலேயே ஆர்வம் காட்டினர். இதை பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், 'இந்த மொபைல் போன் மோகம், பக்தியை மூழ்கடிச்சு பல ஆண்டுகள் ஆகிவிட்டது; இவங்களால், நாமும் சுவாமியை சரியா தரிசிக்க முடிவதில்லை' என, அங்கலாய்த்தார். பக்கத்தில் இருந்தவர், 'சரியா சொன்னீங்க சார்... இந்த மாதிரி நிகழ்ச்சிகள்லயும் மொபைல் போனுக்கு தடை போட்டா நல்லாயிருக்கும்...' என, புலம்பியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
இந்த அவஸ்தையை கபாலி கோயிலில் சென்ற முறை கண்டு நானும் புலம்பினேன்.