வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தப்பிபப்போய் தலைமறைவாகவுள்ள மூவரில் ஒருவராகயிருக்கும்.
நண்பரோ, அல்லது நண்பியாகக்கூட இருக்கலாம் காரை நிறுத்தி, சிரித்துச் சிரித்துப் பேசுமளவு மகேஷ் அப்படி ஒன்றும் கூறியிருக்க மாட்டார்
துணை முதல்வர் உதயநிதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்தார். அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் என பலவற்றில் கலந்து கொண்டார். இரண்டாவது நாள் மாலையில் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இதற்காக வந்த அவருக்கு, இளைஞரணி சார்பில் வழிநெடுக உற்சாக வரவேற்பு அளித்தனர். காரின், 'ரூப் டாப்'பை திறந்து நின்றபடியே, கட்சியினரை பார்த்து கையசைத்தபடி வந்த உதயநிதிக்கு திடீரென மொபைல் போனில் அழைப்பு வந்தது.உடனே காரை நிறுத்தச் சொன்னவர், கார் மீது நின்றபடியே போனை எடுத்து சிரித்து சிரித்து ஜாலியாக சில நிமிடங்கள் பேசினார்.இதைப் பார்த்த தி.மு.க., நிர்வாகி ஒருவர், 'இவ்வளவு ஜாலியா பேசுறாரே... முக்கியமான நண்பரா இருக்குமோ...' என முணுமுணுக்க, சக தொண்டரோ, 'அவரது நண்பர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷா தான் இருக்கும்...' எனக்கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.
தப்பிபப்போய் தலைமறைவாகவுள்ள மூவரில் ஒருவராகயிருக்கும்.
நண்பரோ, அல்லது நண்பியாகக்கூட இருக்கலாம் காரை நிறுத்தி, சிரித்துச் சிரித்துப் பேசுமளவு மகேஷ் அப்படி ஒன்றும் கூறியிருக்க மாட்டார்