உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நமக்கு தான் பிரஷர் ஏறுது

 நமக்கு தான் பிரஷர் ஏறுது

வேலுார் கலெக்டர் அலுவலகத்தில், வாராந்திர மக்கள் குறை தீர் கூட்டம் சமீபத்தில் நடந்தது. கலெக்டர் சுப்புலட்சுமி, மனுக்களை பெற்றார். அப்போது அணைக்கட்டு தாலுகா, செதுவாலை, அரியூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, 250 பேருக்கு வீட்டு மனை பட்டா கேட்டு, இந்திய கம்யூ., கட்சியினர் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர் . கலெக்டர் சுப்புலட்சுமி, 'ஏற்கனவே செதுவாலையில் பொதுமக்களுக்கு பட்டா வழங்கி இருக்கிறோம். நீங்க, 'டிராமா' பண்றீங்களா... உங்களை கைது செய்வோம்' என காட்டமாக கூறினார். இதனால், ஆத்திரமடைந்த கம்யூ., கட்சியினர், கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா செய்தனர். அங்கிருந்த போலீசார் பேச்சு நடத்தி, அவர்களை ஒருவழியாக சமரசப்படுத்தி அனுப்பினர். அப்போது ஒரு போலீஸ்காரர், 'தேர்தல் நேரத்தில் கேட்டால் தான் கிடைக்கும்னு கூட்டம் கூட்டமா வந்துடுறாங்க... இவங்களால, நமக்கு தான் பிரஷர் ஏறுது பா...' என முணுமுணுக்க, சக போலீசார் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
மார் 03, 2026 13:10

பாவம், பள்ளிப்படிப்பை தியாகம் செய்தவர்கள், அவர்கள் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியரின் ஆணைகளைப் படித்திப் புரிந்து கொள்ள முடியாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை