உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / நம்ம மண்டை தான் உருளும்!

நம்ம மண்டை தான் உருளும்!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., சார்பில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்.தி.மு.க.,வினர் நடத்திய ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு முன்பாக, அக்கட்சியினர் மேடையில் அமர்ந்து, அரசியல் பேசினர். அதேபோல், பா.ஜ., நடத்திய பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு முன்னதாக, அக்கட்சியினரும் மேடையில் அமர்ந்து, அரசியல் பேசினர்.பாதுகாப்புக்கு வந்திருந்த போலீஸ்காரர் ஒருவர், 'கலை நிகழ்ச்சிக்குன்னு அனுமதி வாங்கிவிட்டு, கட்சி பொது கூட்டம் மாதிரி, மேடையில் பேனர் கட்டி கொண்டு, மற்ற கட்சிகளை தாக்கி பேசுகின்றனரே... கோவில் திருவிழாவில் அரசியல் பேசுவதால், பொது அமைதி பாதிக்காதா... இதுக்கு நம்ம அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைக்கணும்பா...' எனக் கூற, 'ஆமாம்பா... இங்க ஏதாவது அடிதடி நடந்துட்டா, நம்ம மண்டை தானே உருளும்...' என, அலுத்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மார் 29, 2025 14:00

கல்யாணம், காதுகுத்து என்று அழைத்தால் அங்கு அரசியல், சாவு, இரங்கல் கூட்டமென்றால் அங்கும், கோயில் திருவிழாவில் பக்தர்கள் கலை நிகழ்ச்சி, திரைப்பட பாடல்களும், கட்சி பாட்டுகளும் கேட்டார்களா?


முக்கிய வீடியோ