உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / பழனிசாமிக்கு சிக்கல் தான்!

பழனிசாமிக்கு சிக்கல் தான்!

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகா, சிக்கலில் தேவேந்திரகுல வேளாளர் சங்க கட்டடம் அடிக்கல் நாட்டு விழாவில், அ.தி.மு.க., சார்பில் முதுகுளத்துார் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போது அ.தி.மு.க.,வில் உள்ளவருமான மலேஷியா பாண்டியன் பங்கேற்றார்.அப்போது அவர் பேசுகையில், 'பழனிசாமி என்னை இந்த தொகுதியில் நிற்க சொல்லி உள்ளார். மீண்டும் மீண்டும் சேவையாற்ற வருவேன். ஏனென்றால், நான் எல்லா செல்வங்களையும் பெற்று விட்டேன். கமிஷனாக எந்த ஒரு விஷயத்தையும் பெற அவசியம் இல்லை. எனக்கு ஆதரவளிக்க வேண்டும். உங்களுக்காக பாடுபடுவேன்; எனக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. என்னை தேர்ந்தெடுங்கள்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'கட்சியில் இருந்து வேட்பாளரை அறிவிக்கும் முன், இவரே, 'நான் தான் வேட்பாளர்'னு அறிவிச்சிட்டாரே... இவரை மாதிரியே எல்லாரும் கிளம்பிட்டா, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு சிக்கல் தான்...' என, 'கமென்ட்' அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 11, 2025 01:05

பதவிக்கு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் கூட நான் எல்லா பேர் புகழையும் எட்டி விட்டேன். இனி எனக்கு ஒன்றும் பாக்கியில்லை. என் முகம் எல்லோருக்கும் தெரியும் என்றார். ஆனால் பெரிய முகம் பதித்த போஸ்டர் கட் ஆவுட் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சீரழிகிறது.


D.Ambujavalli
ஜூன் 10, 2025 18:43

கோடிகளில் கொட்டிக்கிடக்கும் செல்வம் இருந்தாலும், பதவி என்று வந்துவிட்டால், சுற்றிலும் உள்ள பரிவாரங்களே தங்கள் பங்காக சிலபல லட்சம், கோடி வரை ‘வாங்க’ இவரையும் கோர்த்துவிடுவார்களே...


முக்கிய வீடியோ