உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பழனிசாமி கழற்றி விட்டுருவார்!

 பழனிசாமி கழற்றி விட்டுருவார்!

இந்திய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் ரவி பச்சமுத்து, பெரம்பலுாரில், சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'தே.ஜ., கூட்டணியில், எங்கள் கட்சிக்கு ஏழு தொகுதிகள் கேட்டுள்ளோம்; கண்டிப்பாக, தனி சின்னத்தில் போட்டியிடுவோம். இலவசங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். அந்த நிதியை பயன்படுத்தி, தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகளை உருவாக்கலாம்; மருத்துவமனைகள் கட்டலாம். 'மக்கள், தன்னிறைவு பெற்று, சுய கவுரவத்தோடு வாழ வேண்டும் என, நாங்கள் நினைக்கிறோம். நாங்கள் இலவசம் தவிர்க்க வேண்டும் என்று கூறியதையே ரஜினிகாந்தும் சொன்னார். அதேபோல விஜயும் சொன்னார். ஆனால், இப்போது, விஜய் மாறிவிட்டார்...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'இலவச வாக்குறுதிகள் வேண்டாம்னு, இவரது கூட்டணி தலைமையான பழனிசாமியிடம் வலியுறுத்தலாமே...' என, 'கமென்ட்' அடித்தார். சக நிருபரோ, 'அப்படி நிபந்தனை விதித்தால், இவரது கட்சியை கூட்டணியில் இருந்தே பழனிசாமி கழற்றி விட்டுருவார்...' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை