‘பேனர்கள் வைக்க கட்டுப்பாடு!’
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில் சமீபத்தில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு, த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன்ராஜா வந்தார். அவரை வரவேற்று, ஆளுங்கட்சியினர் சார்பில், 100க்கும் மேற்பட்ட, ‘பிெளக்ஸ் பேனர்’கள் வைத்திருந்தனர். அதிலும், ஒரே பதவியை, தங்களது போல் குறிப்பிட்டு இரண்டு, மூன்று பேர் பேனர்கள் வைத்திருந்தனர். இதை பார்த்த, த.வெ.க., நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இதை பார்த்த த.வெ.க., தொண்டர் ஒருவர், ‘முதல்வர் விஜய் கலந்துக்கிற நிகழ்ச்சிகள்லயே கட்சியினர் பேனர் வைக்கக்கூடாதுன்னு உத்தரவு போட்டு, அவங்களும் அதன்படி நடக்கிறாங்க... மாவட்ட அமைச்சர்கள் நிகழ்ச்சிகளுக்கும், இனி யாரும் பேனர்கள் வைக்கக்கூடாதுன்னு, தலைமை உத்தரவு போடணும் பா...’ என கூற, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.