உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / வாயை அடைக்கிறாரே...!

வாயை அடைக்கிறாரே...!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த பாதாள சாக்கடை திட்டம் துவக்க விழாவில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத், ஓசூர் மேயர் சத்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சத்யா பேசுகையில், 'ஓசூருக்கு, 30 ஆண்டுகளில் செய்யாத திட்டங்களை முதல்வர் செய்து முடித்து உள்ளார். ஓசூர் நகராட்சியாக இருந்தபோது உயர்த்தப்பட்ட சொத்து வரியை, 50 சதவீதமாக தி.மு.க., குறைத்தது' என்றார்.தொடர்ந்து பேசிய எம்.பி., கோபிநாத், 'நான் ஓசூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, 2010ல் சட்டசபையில், ஓசூர் நகராட்சி சொத்து வரி உயர்வை குறைக்காவிட்டால், நான் ஊருக்கே செல்ல முடியாது என்றேன். அப்போது, துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், 50 சதவீதம் வரியை குறைத்தார்' எனக் கூறி, அவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது செய்த பணிகளை பட்டியலிட, அமைச்சர் நேரு, 'பேச்சை முடிங்க...' என, குறுக்கிட்டார்.காங்., நிர்வாகி ஒருவர், 'சொத்து வரியை மறுபடி இப்ப ஏத்திட்டாங்கன்னு சொல்லிடப் போறாங்களோன்னு பயந்து, வாயை அடைக்கிறார் பாருங்க...' என, முணு முணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி