உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மனு கொடுப்பது வெட்டி வேலை!

மனு கொடுப்பது வெட்டி வேலை!

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஒன்றியம், தாசநாயக்கன்பட்டி ஊராட்சியில், கிராம சபா கூட்டம் நடந்தது; ஊராட்சி பணியாளர்கள் மட்டும் பந்தலில் அமர்ந்திருந்தனர். மக்களை எதிர்பார்த்து காத்திருந்ததால், காலை 11:00 மணிக்கு மேலாகியும் கூட்டம் துவங்கவில்லை.இந்நிலையில், பந்தலுக்கு வெளியே நின்றிருந்த ஒருவர், 'மக்கள் கூட்டத்தையே காணோமே' என்றார். அருகில் இருந்தவர், 'இங்கே மனு கொடுத்தால், அடுத்த கிராம சபா கூட்டத்துல கூட பதில் தருவதில்லை; சும்மா கணக்கு காட்டவே கூட்டம் நடத்துறாங்க. மக்களுக்கு ஏதாவது செஞ்சா பரவாயில்ல... அப்பதானே ஆர்வமா வருவாங்க. நானும் மனு கொடுத்துட்டு தான் இருக்கேன்; ஒண்ணும் நடக்கல' என்றார்.இதை கேட்ட மற்றொருவர், 'நானும் மனு கொடுக்க தான் வந்தேன்... உங்க பேச்சை கேட்டதும், அது வெட்டி வேலைன்னு தெரிஞ்சிடுச்சு...' என்றபடியே, வீட்டை நோக்கி நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 20, 2025 03:46

Minuites இல் கூட்டம் நடந்ததாக பதிவு செய்துவிட்டுக் கிளம்பிவிடுவார்கள் மனுக்கள் கொடுத்திருந்தால் அது பாட்டுக்கு பரணில் சில காலம் தூக்கிவிட்டு பழைய பேப்பர் கடைக்குப் போய்விடும் இதற்குப்போய் கொடுப்பானேன், நேரத்தையும், பயணச் செலவையும் வீணடிப்பானேன் என்ற அலட்சியம்/ விரக்தி மக்களுக்கு வந்துவிட்டது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை