உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மனதார பாராட்டலாமே!

மனதார பாராட்டலாமே!

'பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' கோவை மையம் சார்பில், 'பொறியாளர் தினம்' கொண்டாடப்பட்டது. இதில், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் பணிபுரிந்த, ஓய்வு பெற்ற இயக்குனர் சிவலிங்கம், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் மனுநீதி, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முன்னாள் பேராசிரியர்அருமைராஜ் ஆகியோருக்கு, சிறந்த பொறியாளர் விருதுகள் வழங்கப்பட்டன.மனுநீதி பேசும்போது, அவரது மொபைல் போனில் அலாரம் அடித்தது. அலாரத்தை நிறுத்திய அவர், 'இங்கு பேச, இரண்டு நிமிடங்கள் வழங்கப்பட்டது; நேரத்தின் அருமை கருதி அலாரம் வைத்தேன். ஒவ்வொரு நொடியும் முக்கியம் என்பதால், மக்கள் சிரமப்படாமல் இருக்க சாலைகளில், 'யு - டர்ன்' வசதி ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'இவரை போன்றே எல்லா அரசு ஊழியர்களும் நேரத்தின் அருமை கருதி, மக்களுக்குகுறித்த நேரத்தில் சேவை வழங்கினால் மனதாரப் பாராட்டலாமே...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை