உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாரே!

ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டாரே!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக சந்திரகுமார் கடந்த பிப்ரவரியில் வெற்றி பெற்றார். எம்.எல்.ஏ., அலுவலகம், சூரம்பட்டி நால் ரோடு அருகே உள்ளது. 'இந்த அலுவலகம் ராசி இல்லாதது' என்ற சென்டிமென்டால், அகில்மேடு வீதியில் தனியார் கட்டடத்தில், புதிய எம்.எல்.ஏ., அலுவலகத்தை சந்திரகுமார் சமீபத்தில் திறந்தார்.உள்ளூர் அமைச்சர் முத்துசாமி உட்பட தி.மு.க., நிர்வாகிகள் பெயர்களை அழைப்பிதழில் போட்டிருந்த சந்திரகுமார், காங்கிரஸ் உட்பட கூட்டணி கட்சியினர் பெயர்களை முற்றிலும் தவிர்த்து விட்டார்; இதனால், கூட்டணி கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர்.காங்., நிர்வாகி ஒருவர், 'நம்ம கட்சியிடம் இருந்த இந்த தொகுதியை விட்டுக் கொடுத்தது தப்புப்பா... சந்திரகுமார் இப்பவே ஆட்டத்தை ஆரம்பிச்சுட்டார் பார்த்தீங்களா...' என முணுமுணுக்க, சக நிர்வாகிகள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஏப் 02, 2025 16:06

இவனுக்கு பதிலாக வீதியில் குப்பை பொறுக்கும் ஒருவனுக்கு எம் பி பதவி கொடுக்கலாம் அவனாவது கொஞ்சம் அறிவோடு பேசுவான்


Bhakt
ஏப் 01, 2025 01:32

"கட்டத்தை மாற்றினார்"...இதை கேட்கும் போது அரக்கர்கள் சாகா வரம் கேட்டது தான் ஞாபகம் வருது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை