ஆட்டம் இனி செல்லுபடியாகாது!
நீலகிரி மாவட்டம், குன்னுார் நகராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, தங்களது இருசக்கர வாகனங்களில் பத்திரிகையாளர்களை போல, 'பிரஸ் ஸ்டிக்கர்' ஒட்டி வைத்திருந்த ஒப்பந்ததாரர்கள் இருவர், இந்த சோதனையை கேள்விப்பட்டு, வாகனங்களை வளாகத்தில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தனர். இதை பார்த்த அங்கிருந்த பத்திரிகையாளர் ஒருவர், 'கடந்த தி.மு.க., ஆட்சியில் இந்த ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட தரமில்லாத பணிகளை முறையா ஆய்வு செய்தாலே, இவங்க வண்டவாளம் எல்லாம் தண்ட வாளத்தில் ஏறிடும். செய்றதையும் செஞ்சிட்டு, 'பிரஸ்'னு நம்ம பெயரை பயன்படுத்தி, போலீசாரை ஏமாத்திட்டு இருக்காங்களே' என்றார். அருகில் இருந்த சக நிருபர், 'த.வெ.க., ஆட்சியில மக்கள் எல்லாம் தெளிவா இருக்காங்க... அதனால, இந்த மாதிரி, 'டுபாக்கூர்' ஆசாமிகள் ஆட்டம் எல்லாம் இனி செல்லு படியாகாதுப்பா' என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.