உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  அப்பாவியா எல்லாத்தையும் சொல்றாரே!

 அப்பாவியா எல்லாத்தையும் சொல்றாரே!

தேனி மாவட்டம், சின்னமனுாரில் சமீபத்தில் தி.மு.க. , பொதுக் கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., ஆட்சி யில் முதல்வராக இருந்து, சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார். அவர் பேசுகையில், 'ஒரு மாதத்திற்கு முன், டில்லியில் மத்திய அமைச்சர் ஒருவரை சந்திக்க நேரம் கேட்டேன்; அவரும் வரும்படி சொல்லியிருந்தார். டில்லியில் அவரது இல்லத்தில், 15 நிமிடங்கள் காக்க வைக்கப் பட்டு, திடீரென அவரது உதவியாளர் வந்து, 'அமைச்சர் உங்களை பார்க்க விரும்பவில்லை' என்றார். 'நான் தமிழகத்தின் முதல்வராக இருந்தவன்; எவ்வளவு பெரிய அவமானம். இது குறித்து, சென்னை விமான நிலையத்தில் நிருபர்கள் கேட்டபோது, எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று கூறினேன்' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'எந்த தலைவரும், தான் அவமதிக்கப்பட்டதை வெளியில சொல்ல மாட்டாரு... இவர், ரொம்ப அப்பாவியா எல்லாத்தையும் சொல்றாரே...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை