மேலும் செய்திகள்
மக்களுக்காக போராடினால் கைது தான் திமுக முடிவா?
18-Mar-2025
'தமிழ்' அரசியல் செய்யும் திமுக!
08-Mar-2025
பெரம்பலுாரில், மா.கம்யூ., கட்சியின் கருத்தரங்கம் மற்றும் நிதியளிப்பு கூட்டம், மாவட்டச் செயலர் ரமேஷ் தலைமையில் நடந்தது. இதில், கட்சியின் மாநில செயலர் சண்முகம் பங்கேற்று பேசுகையில், 'தி.மு.க., ஆட்சி அமைத்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. அவர்கள், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில், 78 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாக தெரிவிக்கின்றனர். இன்னும், ஓராண்டுக்குள், 22 சதவீதத்தை நிறைவேற்ற வேண்டும் என, மா.கம்யூ., கட்சி வலியுறுத்துகிறது.'பொதுமக்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், மக்களோடு மக்களாக நின்று மா.கம்யூ., போராடுமே தவிர, தமிழக அரசுடன் நிற்காது. மதுரையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நம் கட்சியின் மாநாடு, இந்திய அரசியலை தீர்மானிக்கும் மாநாடாக அமையும்' என்றார்.இதைக் கேட்ட தொண்டர் ஒருவர், 'தமிழக அரசை எதிர்த்து போராடுவோம்னு தோழர் பேசுறாரே... மதுரை மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி மறுத்துட போறாங்க' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்து தலை அசைத்தனர்.
18-Mar-2025
08-Mar-2025