வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தோல்வியை தவுவிய திமுகவினர் புலம்புவது உண்மை. அதே நேரத்தில் புதிய ஆட்சி இந்த ஒருமாதத்தில் average mark கை பெறவில்லையே. தினமும் லஞ்ச ஊழல் கைது. பாலியல் பலாத்காரம், கொலை கொள்ளை பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை.
கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில், சமீபத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் தி.மு.க., முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதில் அவர் பேசுகையில், 'தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்து ஒரு மாதத்திலேயே மக்கள் மகிழ்ச்சியை இழந்து விட்டனர். தி.மு.க., ஆட்சியில், ஐந்தாண்டு காலம் மின்வெட்டு இல்லாத நிலை இருந்தது. ஆனால், தற்போது சென்னையிலேயே மின் வெட்டை கண்டித்து போராட்டம் நடக்கிறது. 'நடிப்பு வேறு, ஆட்சி வேறு. சினிமாவில் ஒரு நாள் முதல்வர் போல், நிஜத்தில் ஆட்சி செய்ய முடியாது. சினிமாவில் விஜய் கேரவனில் அமர்ந்து சாப்பிட்டார். இப்போது அலுவலகம் வந்து சாப்பிடுகிறார். தமிழக முதல்வர் விஜயா, ஆதவ் அர்ஜுனாவா என தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'மக்கள் தெளிவா தான் இருக்காங்க... இவங்கதான் தோல்வியில் மனசு உடைஞ்சு போய் புலம்புறாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.