உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / ஓவரா பில்டப் தர்றாங்களே!

ஓவரா பில்டப் தர்றாங்களே!

நாம் தமிழர் கட்சியில் முக்கிய தலைவராக இருந்த காளியம்மாள், அங்கிருந்து விலகிய பின், எந்த கட்சியிலும் சேரவில்லை. இந்த சூழலில், திருநெல்வேலியில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனை அவர் சந்தித்தார். சந்திப்புக்கு பின் காளியம்மாள் கூறுகையில், 'நிச்சயமாக ஒரு அரசியல் இயக்கத்துக்கு செல்வேன். அரசியல் என்பது மக்கள் சார்ந்து இருக்கக்கூடியதாக இருந்தாலும், தேர்தல் களம் என்பது ஓட்டு போடுவதில் தான் முடிவடைகிறது. எனவே, எதிர்வரும் தேர்தல் காலத்தில் நிச்சயமாக ஒரு அரசியல் கட்சியோடு தான் என் பயணம் இருக்கும். அது, எந்தக் கட்சி என்பதை பின்னர் அறிவிப்பேன்...' என்றார். இதை கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'பெரிய பெரிய தலைவர்களே சட்டுபுட்டுன்னு கட்சி மாறிடுறாங்க... இவங்க ஓவரா, 'பில்டப்' தர்றாங்களே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
அக் 26, 2025 19:01

பாவம்' 'நான் சேரத் தயார், என்னை ஏற்றுக்கொள்வீர்களா' என்று கூவிக் கூவி விற்கிறார் இவர் வந்து தாங்கிப் பிடிக்கும் நிலையில் எந்தக் கட்சியும் இல்லாததுதான் கொடுமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை