உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / போன்ல தானே படிக்கிறாங்க!

போன்ல தானே படிக்கிறாங்க!

டி.ஐ.ஜி., திருநாவுக்கரசு எழுதிய, 'போட்டித்தேர்வு பதினைந்து புதியது' என்ற புத்தகத்துக்கு மதிப்புரை எழுதியவர்களுக்கு பாராட்டு விழா, திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்க அலுவலகத்தில் நடந்தது.திருநாவுக்கரசு பேசுகையில், 'விமான பயணத்தின் போது, விமானத்துக்காக ஒரு மணி நேரம் காத்திருப்பதோடு, மூன்று மணி நேரத்துக்கு மேல் பயணம் என்றால், பிரிட்டிஷார் மற்றும் அமெரிக்கர்கள், ஒரு புத்தகத்தை படித்து விடலாம் எனக் கருதி, புத்தகம் வாங்கிச் செல்வர்.'ஆனால், நம் மக்கள், மூன்று மணி நேரத்தில் ஒரு சினிமாவை, 'டவுன்லோடு' செய்து பார்த்து விடலாம் என நினைக்கின்றனர். எண்ணங்களை மாற்ற வேண்டும். வெற்றி பெற்ற முதல் தலைமுறையினர், புத்தக வாசிப்பால் தான் முன்னேறி உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு துணையாக புத்தகங்கள் இருந்துள்ளன' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'தப்பித் தவறி புத்தகம் படிக்கிற இளைஞர்கள் சிலரும், மொபைல் போன்ல தானே படிக்கிறாங்க...' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ