உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் போட்டி!

 ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் போட்டி!

தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திருச்செந்துாரில் சமீபத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்து விலகி பலர் தி.மு.க.,வில் சேர விரும்புகின்றனர். அதற்கான தேதியை தி.மு.க., தலைவர் ஸ்டாலினிடம் கேட்டு பெற்று, அவர்கள் கட்சியில் இணைக்கப்படுவர். 'எனக்கு 74 வயதாகி விட்டது. இருக்கும் காலம் வரை மனதில் பட்டதை தைரியமாக பேசுவேன். தி.மு.க.,வின் வளர்ச்சிக்காக என் குரல் எப்போதும் ஒலிக்கும். கட்சி தலைவர் ஸ்டாலினுக்கும், உதயநிதிக்கும் மட்டுமே நான் கட்டுப் படுவேன். வேறு யாருக்கும் அடிபணிய மாட்டேன்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'ஏடாகூடமா பேசுறதுல தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதிக்கு கடும் போட்டியை கொடுப்பார் போலிருக்கே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

A.Kennedy
மே 28, 2026 10:32

அப்ப, இன்பநிதி சொல்லுக்கு கட்டுப்பட மாட்டாரா? இன்பநிதி சொல்வதை கேட்க மாட்டாரா? இதெல்லாம் நல்லதுக்கில்லை, அவ்வளவு தான்.