உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  த.வெ.க.,வினர் டியூஷன் கத்துக்கணும்!

 த.வெ.க.,வினர் டியூஷன் கத்துக்கணும்!

சென்னை திருவொற்றியூர், பெரியார் நகரில், அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சி நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. திருவொற்றியூர் த.வெ.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் நிறைவில், பெண்களுக்கு இலவச புடவைகள் வினியோகிக்கப்பட்டன. அப்போது கடும் தள்ளுமுள்ளு ஏற்படவே, எம்.எல்.ஏ., புறப்பட்டு விட்டார். புடவைகளை வழங்கி முடிப்பதற்குள், த.வெ.க.,வினர் திணறி விட்டனர். இதை பார்த்துக் கொண்டிருந்த இளம் நிருபர் ஒருவர், 'தி.மு.க., - அ.தி.மு.க., கட்சியினர் இத்தனை ஆண்டு காலம் எந்த பிரச்னையும் இல்லாமல், எப்படி புடவைகளை கொடுத்தாங்க?' என கேட்டார். இதை கேட்ட சீனியர் நிருபர், 'இப்ப கட்சியில் இணைஞ்சிருக்கிற அ.தி.மு.க.,வினரிடம், இது சம்பந்தமா த.வெ.க.,வினர் டியூஷன் கத்துக்கணும் பா' என பதிலளிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூன் 19, 2026 19:28

முக்கியமாக. ஒரு. பத்துப்பேருக்கு. கொடுத்துவிட்டு, போய் இன்னும். எடுத்துக்கொண்டு. வருகிறோம். எஸ் ….. ஆகும். சமர்த்துக்கு. வர. விஜய். கட்சிக்கு. நாளாகும் அதற்குள் நிர்வாகிகளை. மக்கள். பிய்த்துக். குதறிவிடுவார்கள்


Anantharaman Srinivasan
ஜூன் 19, 2026 15:23

எப்படி லஞ்சம் வாங்கணும் எப்படி மாட்டிக்காமல் ஊழல் செஞ்யணும் னு சொல்லிக்கொடுக்கத்தான் திமுக அதிமுக உறுப்பினர்கள் தவெகக்கு படையெடுக்கிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை