உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / துாக்கத்தை கெடுத்த விஜய் கட்சி!

துாக்கத்தை கெடுத்த விஜய் கட்சி!

சென்னை, ஓட்டேரியில் உள்ள திருமண மண்டபத்தில்,கிழக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், 'என் உயிரினும் மேலான' என்ற தலைப்பில், இளம் பேச்சாளர்களின் பேச்சரங்கம் நடந்தது. தி.மு.க., கொள்கை பரப்புச் செயலரும், தமிழ்நாடு பாடநுால் கழக தலைவருமான திண்டுக்கல் லியோனி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'கருணாநிதி, தன்னை ஏன் கட்டுமரம் என தெரிவித்தார் என்றால், கட்டுமரம் எப்படிதிருப்பி போட்டாலும் மக்களை ஏற்றி செல்லும். ஆட்சியில் இருந்தாலும், இல்லா விட்டாலும், மக்கள் பணியே மகேசன் பணி என செய்யக்கூடிய இயக்கம்தி.மு.க., தான்.'நெஞ்சில் குடியிருப்பவர்கள் குடியிருந்துவிட்டு, எப்போது வேண்டுமானாலும் காலி செய்து விடுவர். ஆனால், என் உயிரினும் மேலானவர்கள், என்றும் எப்போதும் உங்களுடன் கலந்திருப்பர்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'நெஞ்சில் குடியிருக்கும் என்று, நடிகர் விஜய் தான் பேசுவார்... அவரது கட்சி, இவங்க துாக்கத்தை கெடுத்துடுச்சுங்கிறது நல்லாவே தெரியுது...' என, 'கமென்ட்' அடித்தபடியே நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
நவ 07, 2024 11:33

உயிரிலும் மேலான உடன் பிறப்புகளுக்கு இதயத்தில் இடம் தந்தேன் என்று சொல்லி, தன் ரத்த சம்பந்த உடன் பிறப்புகளை முழுமூச்சுடன் பதவில் அமர்த்துவதிலேயே கட்டுமரம் ஆயுள் முழுவதும் கவனம் செலுத்தியது.


Guna Gkrv
நவ 07, 2024 07:14

போக்கத்த பயலே


J.V. Iyer
நவ 07, 2024 04:45

அன்று கட்டுமரம் திருட்டு ரயில் ஏறி இருக்காவிட்டால்... தமிழகம், தமிழ் மொழி, தமிழ்மக்கள் இந்த தீராவிஷம் என்ற இருளகத்தில் இருக்கவேண்டிய கட்டாயம் இருந்திருக்காது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை