உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவரை பக்குவப்படுத்தணும்!

இவரை பக்குவப்படுத்தணும்!

தஞ்சாவூரில் உள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனமான, 'நிப்டெம்'மில், வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடந்தது. துவக்க விழாவில், தமிழக வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றார்.மாநாட்டில் அவரை பேச அழைத்த போது, தன் உதவியாளர் பரசுராமனை, 'எருமை மாடா நீ... பேப்பர் எங்கே...?' என ஒருமையில் திட்டினார். அதே கோபத்தில், 'நிப்டெம் இயக்குனர் பழனிமுத்து என்னை கூப்பிடவில்லை. அவர் என்னுடன், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார். நிப்டெம் பல மாணவர்களை உருவாக்கினாலும், விடியாமல் இருக்கிறது. 'பச்சை துண்டு அணிந்த விவசாயிகள் சிலர் தான் வந்துள்ளனர். விவசாயத்தை வைத்து தொழில் செய்பவர்கள் தான் நிறைய வந்துள்ளனர்' என, சாடினார்.மூத்த நிருபர் ஒருவர், 'உணவு பதப்படுத்துவது குறித்து ஏதாவது பேசுவார்னு பார்த்தால், இவரை பக்குவப்படுத்தவே தனி ஆள் வேணும் போலிருக்கே...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்து தலையாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜன 11, 2025 23:07

இன்றைய அரசியலில் பக்குவபட்ட அரசியல்வாதிகள் மிகமிக குறைவு. குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் கொண்டவர்களே அதிகம்.


Yes your honor
ஜன 11, 2025 12:49

அறிவுக்கும் அமைச்சர்களுக்கும் சம்பந்தமில்லை. அதனால் தான் நிப்டெம் போன்ற ஆராய்ச்சி சார்ந்த கல்விநிறுவனங்களில் சென்று அமைச்சர் சம்பந்தமில்லாமல் பேசுகிறார். இவர் இவ்வாறு பேசியதால் நிப்டேம்மிற்கோ அல்லது அங்குள்ள கல்வியாளர்களுக்கோ ஒன்றும் குறைவு வந்துவிடாது. மாறாக, படித்தவர்கள் மத்தியில் இந்த அமைச்சரின் மேலான மரியாதைக்குத்தான் குறைவு வரும்.


முக்கிய வீடியோ