UPDATED : நவ 08, 2026 12:00 AM | ADDED : நவ 08, 2026 12:00 AM
வங்கக்கடலில் சமீபத்தில் உருவாகி, ஆந்திராவில் கரையை கடந்த ‘முரசு’ புயல் காரணமாக, சென்னையின் திருவொற்றியூர் மற்றும் மணலி பகுதிகளில் அதிக காற்று, மழை பொழிவு இருக்கும் என முன்பே கணிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், திருவொற்றியூர் சமுதாய நலக்கூடத்தில் முகாமிட்டிருந்தனர். அவர்களை, சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் சந்தித்து நிலவரங்களை கேட்டறிந்தார். பின்னர் பேட்டியளித்த சமீரன், புயலின் தாக்கம், சென்னைக்கான பாதிப்பு, குறிப்பாக திருவொற்றியூர், மணலி மண்டலங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைக்கான காரணம் உள்ளிட்ட தகவல்களை, தொடர்ந்து எட்டு நிமிடங்கள் பேசி விளக்கினார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘இவரை போல எல்லா அதிகாரிகளும் தகவல்களை விரல் நுனியில் வச்சிட்டு பேட்டி குடுத்துட்டா, நமக்கு கேள்வி கேட்கிற வேலை மிச்சம் பா...’ என, ‘கமென்ட்’ அடிக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.