வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காங்கிரஸ் கட்சியில் எல்லாரும் தலைவர்களே தொண்டர் என்று யாருமில்லை. எனவே நூறு பேரும் நூறு பக்கம் இழுப்பார்கள் நவக்கிரகமே தோற்றுப்போய்விடும்
சிவகங்கை தொகுதி காங்., - எம்.பி., கார்த்தி கோவை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர், தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறும்போது, 'தமிழக காங்கிரசில் அடிப்படை பிரச்னைகள் உள்ளது. யாரை தலைவராக போட்டாலும், ஒரு சிறிய வட்டத்திற்குள் தான் அவர்கள் செயல்படுகின்றனர். அந்த வட்டத்திற்குள் செயல்படும்போது இவ்வளவுதான் செய்ய முடியும். அவர்கள் சுதந்திரமாக செயல்பட்டால்தான் வேறு ஏதாவது செய்ய முடியும்' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இவர் சொல்றது ரொம்ப ரொம்ப சரி... சுதந்திரமா செயல்பட வேண்டும் என்ற இவர் கருத்தை தான், காங்., கட்சியில் இருக்கும் அனைவரும் பின்பற்றுகின்றனர்... அதாவது, தனித்தனியா ஒவ்வொருவரும் சுதந்திரமா செயல்படுறாங்க...' எனக்கூற, சக நிருபர்கள் சிரித்தபடியே கலைந்தனர்.
காங்கிரஸ் கட்சியில் எல்லாரும் தலைவர்களே தொண்டர் என்று யாருமில்லை. எனவே நூறு பேரும் நூறு பக்கம் இழுப்பார்கள் நவக்கிரகமே தோற்றுப்போய்விடும்