உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / கவுன்சிலர் பதவி எதற்கு?

கவுன்சிலர் பதவி எதற்கு?

பெஞ்சல் புயல் காரணமாக, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, 110வது வார்டில் அடங்கிய புஷ்பா நகர் குடியிருப்புக்குள் மழை வெள்ளம் புகுந்தது. பொதுமக்கள் அலறியடித்து, வார்டு கவுன்சிலரும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான சிற்றரசுவை தேடினர்.கவுன்சிலர், மாவட்ட செயலர் ஆபீஸ்களில் சிற்றரசுவை பார்க்க முடியவில்லை. புகார் கொடுக்க சென்ற பொதுமக்கள், சிற்றரசுவின் வீட்டிற்கு படையெடுத்தனர்;அங்கும் அவர் இல்லை.இதனால் ஏமாற்றமடைந்த ஒருவர், 'துணை முதல்வர்உதயநிதியின் ஆதரவாளர் என்பதால், மழை சேதங்களைபார்வையிடும் அவருடன், சிற்றரசு சென்றிருப்பார்' என்றார்.உடனே இளைஞர் ஒருவர், 'மக்களுக்கு பணி செய்ய முன்வராதவர், எதற்கு கவுன்சிலர் பதவியில் இருக்கணும்... ராஜினாமா பண்ணிட்டு, துணை முதல்வருடன் சுற்ற வேண்டியது தானே' என, திட்டியபடியே அங்கிருந்து நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
டிச 07, 2024 20:58

முதல்வர் துணைமுதல்வர் பின்னால் சுற்றினால் தான் அவர்களுக்கு தான் நெருக்கமென காட்டி அரசு துறைகளில் காரியம் சாதித்துக்கொள்ள முடியும்.


Yes your honor
டிச 07, 2024 15:42

நம் மக்களுக்கு இவர்தான் சரியானவர். சென்றமுறை மழைவெள்ளத்தின் பொது ஓடி ஓடி உதவிய பா.ஜ.க. வினோத் ஜிக்கு மக்கள் அவர்கள் நன்றியைத்தான் நன்றாக காண்பித்தார்கள். இம்மக்களுக்கு இவர் போன்ற மாடல் மண்டைகள்தான் சரி. இப்பொழுது எதற்கு மழையிலும் வெள்ளத்திலும் சிரமப்பட்டுக்கொண்டு சேவையெல்லாம் செய்ய வேண்டும். தேர்தல் வந்தால் பிச்சைபோட்டால் போதும், கடவுளாகிவிடலாம் என்னும் லாஜிக்ககை தெளிவாக தெரிந்துவைத்துக் கொண்டுள்ளார்.


D.Ambujavalli
டிச 07, 2024 06:23

என்ன மக்களுக்கு விவரமே தெரியவில்லை து. முதல்வருடன் சுற்றினால் நாளைக்கு தேர்தலில் சீட் வாங்கலாம் மழை, வெள்ளம் என்று மக்கள் நலத்துக்கு முன்வந்தால், அவர்கலா அவர்களா உதவிக்கு வருவார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை