உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / சிபாரிசு கேட்டது யாராம்?

சிபாரிசு கேட்டது யாராம்?

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் பங்கேற்றார்.அவர் பேசுகையில், 'நொய்யலாறு மாசு காரணமாக, காங்கேயம், மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் நேரடியாக பாதிக்கப்படுகின்றன. ஒரு மாதம் முன், என்னை போனில் அழைத்த ஒருவர், 'நொய்யலாற்றோரம் கழிவை கொட்டி விட்டேன். திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது; அபராத தொகையை கொஞ்சம் குறைக்கச் சொல்லுங்கள்' என்றார். நான் அவரை சத்தம் போட்டு விட்டேன்' என்றார்.இதை கேட்ட அதிகாரி ஒருவர், 'இவரை போலவே எல்லா மக்கள் பிரதிநிதிகளும் இருந்தா நல்லா இருக்குமே...' என முணுமுணுக்க, மற்றொரு அதிகாரி, 'இவரிடம் சிபாரிசு கேட்டவர் யாருன்னு சொல்லலியே... ஏன்னா கட்சிக்காரங்க கேட்டு இவர் மறுத்திருப்பாரா என்ன...?' என, 'டவுட்' கிளப்பியவாறு நடையை கட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
அக் 03, 2024 18:52

அன்றே சொன்னாரே திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்மக்கள் சோப் போட்டுக் குளிப்பதால்தான் இந்த நுரை' என்று எனவே அந்த ஊர்க்காரர்கள் இன்னும் சோப் போட்டுக் குளிப்பதை விடவில்லை என்று தெரிகிறது அந்த 'நிவாரணத்துக்கு' மக்கள் ஒத்துழைப்புத் தந்தால்தான் உண்டு


Dharmavaan
அக் 03, 2024 08:09

நொய்யலாறு மேட்டரை எந்த போராட்டக்காரனும் பேசுவதில்லை


முக்கிய வீடியோ