வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பதவி ஆசை என்பது எல்லாருக்கும் உண்டு அதில் திமுக கட்சியினரும் விதிவிலக்கல்ல அதே நேரம் ஏதோ த வெ க வினர் இந்த பதவி மீது ஆசை இல்லாதோர் போல
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் கிராமத்தில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், கூடுதல் கலெக்டர் ஆசிக் அலி, த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். ஊராட்சியின் முன்னாள் தலைவர் வடிவுக்கரசியும், அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர் அமரும் வரிசையில் வந்து அமர்ந்தார். சமுதாய கூட கட்டடத்தை ஆய்வு செய்யும் போதும் அவர் பங்கேற்றார். இதை பார்த்த த.வெ.க., நிர்வாகி ஒருவர், ‘ஊராட்சி தலைவர் பதவிக்காலம் முடிஞ்சும், இன்னும் தலைவரை போல வலம் வர்றாங்களே’ என முணுமுணுத்தார். அருகிலிருந்த சக நிர்வாகி, ‘அடுத்து வர்ற உள்ளாட்சி தேர்தல்லயும் நின்னு ஜெயிக்கணும்னு நினைக்கிறாங்களோ என்னமோ... பதவி ஆசை யாரை விட்டது...?’ என்றபடியே அங்கிருந்து நகர்ந்தார்.
பதவி ஆசை என்பது எல்லாருக்கும் உண்டு அதில் திமுக கட்சியினரும் விதிவிலக்கல்ல அதே நேரம் ஏதோ த வெ க வினர் இந்த பதவி மீது ஆசை இல்லாதோர் போல