உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / இவங்க வாங்குறது யாருக்கு தெரியுது?

இவங்க வாங்குறது யாருக்கு தெரியுது?

தஞ்சாவூரில், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. இதில் பங்கேற்ற உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 'பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை எந்த அளவுக்கு காலாவதி ஆனவர் என்பது பா.ஜ.,வுக்கு நன்றாக தெரியும். 'மகா யோக்கியரை போல வேஷம் போட்டு, ஒரு அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறி, தமிழகத்துக்கு பின்னடைவை தேடி தந்தவருடைய அனைத்து இருட்டுத்தனமான, கள்ளத்தனமான செயல்பாடுகள் இன்றைக்கு வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது...' என்றார். இதை கேட்ட ஆசிரியர் ஒருவர், 'அண்ணாமலை, கோவையில் விவசாய நிலம் வாங்கியதை தான் இவர் சுட்டிக்காட்டுறாரு... ஆனா, ஆளுங்கட்சியினர் காதும் காதும் வச்ச மாதிரி வாங்கி போடுறது யாருக்கு தெரியுது...' என முணுமுணுக்க, சக ஆசிரியர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ