வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அரசியலில் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாத பச்சோந்தி திருமா..
கொஞ்சமாவது போக்கு காட்டாமல் ஒரேயடியாக சரணடைந்தால் தலைமைக்கு மரியாதை குறைந்துவிடுமே அதனால்தான் நாலு முறை யோசனை செய்யும் நாடகம் நடத்திவிட்டு சேர்ந்துகொண்டார்
காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, மா.கம்யூ., - இந்திய கம்யூ., மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து சமீபத்தில் வேலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், வி.சி.க., மாநில அமைப்பு செயலர் நீல.சந்திரகுமார் பேசுகையில், 'தி.மு.க.,வினரிடம் பல அவமானங்களை சுமந்து கொண்டு, கடும் வெயிலில் பிரசாரம் மேற்கொண்டோம். எந்த இடத்திலும், விசில் அடிச்சான் குஞ்சுகளை பார்க்கவில்லை. ஆனால், எதுவுமே செய்யாமல், த.வெ.க.,வினர் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று விட்டனர். 'இந்திய கம்யூ., கட்சியை சேர்ந்த மகேந்திரனிடம், திருமாவளவனின் தொடர்பு எண்ணை தருமாறு, த.வெ.க., மாநில நிர்வாகி செங்கோட்டையன் கேட்டுள்ளார். பின், திருமாவளவனுக்கு அவர் போன் செய்தபோது, 'வேலை இருக்கிறது' எனக்கூறி, போனை 'கட்' செய்து விட்டார்...' என்றார். இதை கேட்ட பொதுஜனம் ஒருவர், 'அப்படி போக்கு காட்டினால் தான், கூட்டணி ஆட்சியில் வெயிட்டான துறைகள் கிடைக்கும்னு திருமாவளவன் நினைச்சிருப்பாரோ...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.