உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பழைய பாசம் போகலையோ?

 பழைய பாசம் போகலையோ?

சென்னை திருவொற்றியூர், தேரடியில், பா.ஜ., மீனவர் அணி சார்பில், சிங்காரவேலர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். அதே நாளில், தேரடி தனியார் மண்டபத்தில், திருவொற்றியூர் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. இதில், சென்னை மண்டல தி.மு.க., பொறுப்பாளர் ராஜா எம்.பி., பங்கேற்றார். ஒரே இடத்தில், தி.மு.க., - பா.ஜ., நிகழ்ச்சிகள் நடந்ததால், இரு கட்சிகளும், திருவொற்றியூர் நெடுஞ்சாலை - மெட்ரோ ரயில் துாண்கள் இடையிடையே, கட்சி கொடிக் கம்பங்களை நட்டு வைத்திருந்தனர். இதை பார்த்த முதியவர் ஒருவர், 'என்னப்பா தி.மு.க., - பா.ஜ., கூட்டணி போட்டுக்கிட்ட மாதிரி, அடுத்தடுத்து கொடிகளை நட்டிருக்காங்களே...' என்றார். இதை கேட்ட இளைஞர் ஒருவர், 'அவங்க ரெண்டு பேரும் ஒரு காலத்துல கூட்டணியா இருந்தவங்க தானே... பழைய பாசம் இன்னும் போகலை போலிருக்கு...' என, 'கமென்ட்' அடித்தபடியே நடந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
பிப் 23, 2026 06:22

நேற்று ஓடிக்கொண்டதும் இன்று - போலியாக - எதிர்ப்பதும் அவர்களின் பிள்ளை விளையாட்டு இவ்களுக்காவது, பாசம், பந்தமாவது?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை