| ADDED : மே 31, 2025 10:15 PM
தமிழக பா.ஜ., மூத்த தலைவரான எச்.ராஜா, தஞ்சையில் நிருபர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், 'டாஸ்மாக் வழக்கில், அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்காலத் தடையைத்தான் சுப்ரீம் கோர்ட் விதித்து இருக்கிறது. இதை நினைத்து உதயநிதி போன்றவர்கள் அடக்கிப் பேச வேண்டும். இல்லையென்றால் அதிக விலை கொடுக்க வேண்டி வரும்.'தமிழக கல்வித்துறைக்கு, 2.0 திட்டத்தின் கீழ் மத்திய அரசின் நிதி கொடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில், புதிய கல்விக் கொள்கையும் ஒன்று. இந்த திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தாததால், நிதி கொடுக்கவில்லை. மொழி பிரச்னையை கிளப்பி இனியும் உருட்டிக்கொண்டு இருக்க வேண்டாம். கொஞ்சம் பொறுப்பாக இருக்க வேண்டும்...' என்றார்.இதைக் கேட்ட பா.ஜ., தொண்டர் ஒருவர், 'மொழி அரசியல் பண்ணி ஆட்சியை பிடிச்சவங்க, அவ்வளவு லேசுல அதை விடுவாங்களா...?' என, முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தனர்.