உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  ஓட்டு போடாதவங்களுக்கு சாபம்!

 ஓட்டு போடாதவங்களுக்கு சாபம்!

ஜல்லிக்கட்டு குறித்து சோழவந்தான் த.வெ.க., - எம்.எல்.ஏ., கருப்பையாவின் சர்ச்சை பேச்சை கண்டித்து, மதுரை அலங்காநல்லுாரில் அ.தி.மு.க., சார்பில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசுகையில், 'த.வெ.க., ஆட்சியில் எதுவுமே செய்வது கிடையாது. 'ரீல்ஸ்' போடுவதிலேயே போய் விடுகிறது. அடுத்து விஜய் தான் பிரதமராம். 'மைனாரிட்டி' ஆட்சியை நடத்திக் கொண்டு இந்த கொழுப்பா? கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில் ஏறி வைகுண்டத்திற்கு போனான் என்பது போல் உள்ளது. 'உங்கள் படமும் ஓடவில்லை; உங்க ஆட்சியும் ஓடாது. ஊடகத்தினர், 'அ.தி.மு.க., தான் ஆட்சிக்கு வரும்' என்று சொன்னார்கள். ஓட்டு பெட்டியை திறந்து பார்த்தால், ஓட்டே கேட்காதவருக்கு ஓட்டு போட்டு விட்டீர்களே சண்டாளங்களா...' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதவங்களுக்கு சாபம் விடுறாரே...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !