‘படிப்படியா தானே செய்ய முடியும்!’
மா.கம்யூ., கட்சியின் அகில இந்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ராமகிருஷ்ணன், சமீபத்தில் அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘தமிழகத்தில், த.வெ.க., ஆட்சி அமைந்து ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இந்த ஆட்சியில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும், முந்தைய தி.மு.க., – அ.தி.மு.க., அரசுகள் பின்பற்றிய தாராளமய கொள்கை களையே தற்போதைய அரசும் பின்பற்றுகிறது. ‘அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், ஊழல் குறைந்துள்ளதாக கூறப்பட்டாலும், ஊழலே இல்லை என்று கூற முடியாது. ஊழலற்ற நிர்வாகத்தை த.வெ.க., அரசு வழங்க வேண்டும்’ என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், ‘ஆறே மாசத்துல ஊழலை அடியோடு ஒழிச்சுட முடியுமா... படிப்படியா தானே செய்ய முடியும்...’ என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.