உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  நீங்களும் ரீல்ஸ் போடுங்களேன்!

 நீங்களும் ரீல்ஸ் போடுங்களேன்!

சென்னை மாநகராட்சியின் திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் சமீபத்தில் நடந்தது. கூட்டத்தில், 13வது வார்டு தி.மு.க., பெண் கவுன்சிலர் சுசிலா பேசுகையில், 'என் வார்டில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பிரச்னை உள்ளது. நான்கு ஆண்டுகளாக மக்களுக்கு இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறேன். ஆனால், ஏதோ ஒரு இடத்தில் கழிவுநீர் பிரச்னையை சரி செய்து விட்டதாக, த.வெ.க.,வினர், 'ரீல்ஸ்' எடு த்து சமூக வலைதளங்களில் பரப்பி கொண்டிருக்கின்றனர்' என்றார். இதற்கு பதிலளித்த மண்டல குழு தலைவர் தனியரசு, 'இனிமே நீங்களும் மக்கள் பிரச்னைகளை கையாளும் போது, ரீல்ஸ் எடுத்து போடுங்களேன்' என்றார். இதை கேட்ட நிருபர் ஒருவர், 'த.வெ.க.,வுக்கு அவங்க பாணியிலயே பதிலடி குடுங்கன்னு தனியரசு சொல்றாரோ...?' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை