பழமொழி :கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்!
கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோல்! பொருள்: ஒருவர் பக்தியோடு, துளசி மாலையை கையில் வைத்திருந்தாலும், அவரது உண்மையான குணம் கக்கத்தில் செருகி இருக்கும் கன்னக்கோல் போல கெட்டதாக இருக்கலாம். எனவே, புறத்தோற்றத்தால் ஒருவரை மதிப்பிடக் கூடாது!