உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை;துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே, ஓடும் பஸ்சில் பள்ளி மாணவனை வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ள நிகழ்வு, மனதை வேதனை அடைய செய்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்க ஆட்சியாளர்கள் தவறியதால், குற்றங் கள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. ஜாதியை, பலகையில் அழித்துவிட்டு, மனதில் பதிய செய்து கொலை செய்ய துாண்டுவதற்கு பெயர்தான் சமூக நீதியா?அதுசரி... வட்டம், குட்டம், மாவட்டம்னு நாலாபுறமும் இருந்து அரசியல் நெருக்கடிகள் வர்றப்ப, எந்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வாங்கி கொடுக்க முடியும்? பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: பா.ம.க.,வை பொறுத்தவரை, மும்மொழி கொள்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. பி.எம்.ஸ்ரீ., பள்ளிகளை ஏற்க மறுப்பதால், தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு மறுப்பதும் நியாயமல்ல. இந்த விவகாரத்தில், தமிழக அரசின் பக்கமே நியாயம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், தமிழகத்திற்கான நிதி உடனடியாக கிடைத்துவிடும். ஆனால், தமிழகத்திற்கு நிதியையும், நீதியையும் பெறுவதை விட, இந்த சிக்கலை வைத்து அரசியல் செய்வதில் தான் தி.மு.க., அரசு தீவிரம் காட்டுகிறது.தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., இருந்தாலும், 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற பாணியில் மத்திய அரசை டாக்டர் கண்டிக்கிறாரோ?தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'யார் அந்த சூப்பர் சி.எம்.,' என்ற தர்மேந்திர பிரதான் கேள்விக்கு, தி.மு.க.,விடம் இருந்து ஏன் பதில் இல்லை. முதல்வர் ஒப்புக்கொண்ட ஒரு திட்டத்தை, வேறு ஒரு சூப்பர் சி.எம்., நிராகரிக்க முடிகிறது என்றால், உண்மையான முதல்வராக ஸ்டாலின் தான் செயல்படுகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.இதுல என்ன சந்தேகம்... சூப்பர் முதல்வர் என்றால், அது உதயநிதி தவிர வேற யாராக இருக்க முடியும்?தமிழக பா.ஜ., பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் பேட்டி: திருச்சி, மன்னார்புரம் ராணுவ மைதானத்தில், வரும் 23ம் தேதி மாலை தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து மாநாடு நடத்த பா.ஜ., ஏற்பாடு செய்து வருகிறது. இந்த மாநாடு, தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும். தி.மு.க.,வை வீழ்த்துவதற்கான முதல் அஸ்திரமாகவும் இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.திருச்சி மாநாடு, பா.ஜ.,வுக்கு திருப்புமுனை மாநாடாக அமை யும்னு நம்புறாரு... அதை, இவங்க கூட்டணியில் சேர்ந்திருக்கிற, சேர காத்திருக்கிற கட்சிகளும் நம்பணுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
மார் 14, 2025 11:22

மருத்துவருக்குப் பொது அறிவு சற்றுக் குறைவுதான் பி எம் ஶ்ரீ திட்ம் என்பது ஒரு திட்டம்- அதனை ஏற்றால் மட்டும் அதற்கான நிதி என்பது கூட இவருக்குப் புரியவில்லையே! ந்ல்வேளை மக்கள் இவர்களது கைகளில் ஆட்சிப் பொறுப்பைக் கொடுக்கவில்லை!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை