பேச்சு, பேட்டி, அறிக்கை
புதுச்சேரி முன்னாள் கவர்னர் தமிழிசை அறிக்கை: தொடர் வரிவிதிப்பு, திறமையற்ற நிர்வாகம், வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிறைவேற்றி விட்டதாக பொய் சொல்வதால் தி.மு.க., மீது மக்கள் கொதித்துப் போய் உள்ளனர்.வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல், தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதும் தேர்தலாக இருக்கும்.தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுதுறாங்களோ இல்லையோ... அந்த தேர்தலிலாவது, பா.ஜ.,முன்னுரை எழுதுமா?பொள்ளாச்சி தொகுதி அ.தி.மு.க., -- எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி: கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.,வளர்ந்து வருவதை பொறுக்கமுடியாமல், முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது,மூன்றரை ஆண்டுகள் கழித்து, இப்போது ஊழல் நடந்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.சட்டுபுட்டுன்னு வேலையை முடிக்காம, மூன்றரை வருஷம் ஏன் லேட்டுன்னு கேட்கிறாரா?வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி: தி.மு.க.,கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும், பல ஆண்டுகள் அனுபவம் பெற்றவை.வி.சி.,க்கள் தேர்தல் அரசியலுக்குவந்து, கால் நுாற்றாண்டு கடந்து விட்டது. எனவே, கூட்டணியில், எந்த நேரத்தில்,என்ன பேச வேண்டும்,என்ன கோரிக்கை வைக்கவேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். தேர்தல் அரசியலில்அடியெடுத்து வைத்தபோது, ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று தான் முழக்கமிட்டோம். எனவே, விழிப்புணர்வு இல்லாத கட்சி அல்ல நாங்கள்.இது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தெரியாதது இல்லை.இவங்க, ஆளுங்கட்சியிடம் பெரிய கோரிக்கை வச்சதாகவும், அதை நிறைவேற்றித் தர அரசை பணிய வைக்க தான் மதுவிலக்கு மாநாடு நடத்துறதாகவும் உலா வரும் பேச்சை உண்மைன்னு ஒப்புக்கொள்கிறாரா?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே தனியார் உணவகத்தில்அரசு முத்திரையிட்ட சத்துணவுமுட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அங்கன்வாடி மையங்கள் முதல் அரசு உதவி பெறும் பள்ளிகள் வரை குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலனுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகள், வெளிச்சந்தைகளில்விற்பனை செய்யும் நிலை, பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தை காட்டுகிறது. என்னமோ, பள்ளிக்கல்வித்துறை மற்ற விஷயங்களில் எல்லாம் லட்சியத்தோட செயல்படுற மாதிரி பேசுறாரே!