உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ அறிக்கை: தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, இலங்கை கடற்படை கைது செய்து, படகுகளை பறிக்கின்றனர்; கடுமையாக அபராதம் விதிக்கின்றனர். மத்திய அரசு, இலங்கை புதிய அதிபர் அனுரா குமார திசநாயக அரசுடன் பேசி, தமிழக மீனவர் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்களுக்கு விதித்துள்ள அபராதம், சிறை தண்டனை போன்றவற்றை ரத்து செய்ய அறிவுறுத்த வேண்டும்.மன்மோகன்சிங் பிரதமரா இருந்தப்ப, 2004ல் கூட்டணி ஆட்சியில் இவங்க கோலோச்சிய போதே, தீர்த்திருக்க வேண்டிய பிரச்னை இது! பா.ம.க., மாநில பொருளாளர்திலகபாமா அறிக்கை: 'அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி எப்போது?' என்ற கேள்விக்கு, 'மாற்றம் இருக்கும்; ஏமாற்றம் இருக்காது' என, முதல்வர் ஸ்டாலின் கூறினார். அவர் மகனுக்கு மாற்றம்; மக்களுக்கு ஏமாற்றமா? அமெரிக்காவிற்கு முதலீடுகளை ஈர்க்க சென்று, அது குறித்து ஒரு வெள்ளை அறிக்கை கூட வெளியிடவில்லை. இதையெல்லாம் சரி செய்யாமல், தன்மகனுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க, ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.'என் குடும்பத்தில் இருந்து யாரும் அரசியலுக்கு வரமாட்டாங்க'ன்னு சத்தியம் செய்த ராமதாஸ், தன் மகன்,மருமகள்னு வரிசை கட்டி அரசியலில் களம் இறக்குவது மட்டும் சரியா?ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: ஹிந்து தர்மத்துக்கு எதிரான விஷம காரியங்களை தொடர்ந்து செய்யும் ஆபத்து,தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது. இத்தகைய அநாகரிகமான, அருவருக்கத்தக்க போக்கு, தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிகரித்து வருகிறது; இதை, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியது அவசியம்.அவங்க ஆட்சிக்கு வந்ததும் முளை விட்டது, மூன்றரை வருஷத்துல மரமா மாறிடுச்சே!தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி: 'இண்டியா' கூட்டணி எக்கு கோட்டை போல மிக வலிமையாக உள்ளது. வி.சி., துணை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கு, அக்கட்சி பொதுச்செயலர் ரவிக்குமாரே விளக்கம் அளித்து விட்டார்; அதற்கு மேல் அந்த விவகாரம் குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. அது அவர்களின் உட்கட்சி விவகாரமும் கூட.இதுக்கு முன்னாடி இவர் இருந்த கட்சிதானே... அதனால தான் நாசுக்கா நழுவுறாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ